இங்கிலாந்தை சேர்ந்த உணவு பிரியை ஒரு நிமிடத்தில் 19 சிக்கன் நக்கட்ஸ் எனப்படும் உணவை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த உணவு பிரியை லியா ஷட்கெவர், ஒரு நிமிடத்தில் 352 கிராம் சிக்கன் நக்கட்ஸ் உணவை சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் நியூசிலந்தை சேர்ந்த உணவு பிரியை நெலா சிஸ்ஸெர் ஒரு நிமிடத்தில் 298 கிராம் சாப்பிட்டதே சாதனையாக கருதப்பட்டது.
ஒன்றரை ஆண்டு கால சாதனையை முறியடித்த லியா, ஏற்கனவே பல்வேறு கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.