கனடாவில் மதுவுக்கு அடிமையான பொலிஸ் அதிகாரியால் சக பெண் காவலருக்கு நேர்ந்த கதி!


கனடாவில் சக பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தில் முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வான்கூவரை சேர்ந்த ஜக்ராஜ் பேரர் என்பவர் காவல்துறை அதிகாரியாக இருந்தவர்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்ற போது ஹொட்டல் ஒன்றில் வைத்து சக பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

அதன்படி குளியலறையில் தள்ளிவிடப்பட்ட அப்பெண் தூக்கத்தில் இருந்து எழுந்த போது ஜக்ராஜ் அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்துவதை உணர்ந்தார்.
இந்த சம்பவம் காரணமாக அப்பெண்ணின் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, உளவியல் ரீதியான பாதிப்புக்கும் உள்ளானார்.

இதையும் படிங்க: கனடாவில் தீப்பிடித்து எரிந்த வீடு! உள்ளே தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தனது மேல் அதிகாரிகள் தனக்கு சரியாக உதவவில்லை என்று அப்பெண் குற்றஞ்சாட்டினார்.
கைது செய்யப்பட்ட ஜக்ராஜ் மீது விசாரணை நடந்து வந்த நிலையில் சமீபத்தில் ஓராண்டு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஜக்ராஜால் பாதிக்கப்பட்ட பெண் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டார் என நீதிபதி தீர்ப்பின் போது தெரிவித்தார்.
இதனிடையில் ஜக்ராஜுக்கு மது அருந்தும் பழக்கம் அதிகம் இருந்தது எனவும் அதுவும் அவர் இக்குற்றத்தை செய்ய வழிவகுத்தது என தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.