மத்தியப் பல்கலைகழகங்கள் அனைத்திலும்
பொது நுழைவுத் தேர்வு
(CUET) மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என யுஜிசி அண்மையில் அறிவித்திருந்தது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தும் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.
இந்த நிலையில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள்,
கல்லூரிகள்
மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும், பொது நுழைவுத்தேர்வு தரவரிசைப பட்டியலின் அடிப்படையிலேயே வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்க ஏதுவாக இந்த பொது நுழைவுத் தேர்வை நடத்த உயர் கல்வி நிறுவனங்கள் முன்வர வேணடும் என்று யுஜிசி கேட்டு கொண்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் இணையதளத்தில் CUET தேர்வுக்கான விண்ணப்ப பக்கம் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இணையத்தில் கிடைக்க பெறும் எனவுமம், அடுத்த கல்வியாண்டு முதல் 45 மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் CUET கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, CUET தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும் எனவும், தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளை nta.ac.in இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு அனுமதிக்கப்படாது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், யுஜிசி இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த செய்திபாஜக ஆட்சியில் இந்துக்கள் அல்லாதோருக்கு தேடிவரும் பிரச்சனை!