பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கார்னர் ஷாட் ஆயுதம் விரைவில் சி.ஆர்.பி.எப். மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசாருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனேவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஆயுதம் தாக்குதல்களின் போது கட்டட மூலைகளில் மறையும் எதிரிகளை துல்லியமான வீடியோ முறையில் கண்காணித்து அதற்கேற்ற நிலையில் வளைந்து தாக்குதல் நடத்தக்கூடியது என்றும், இதனால் எதிரிகளின் திடீர் தாக்குதலை சமாளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனை முயற்சிகள் வெற்றி பெற்ற நிலையில் விரைவில் சி.ஆர்.பி.எப். மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசாருக்கு ஆயுதம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.