புதுச்சேரி : காலாவதியான உணவு பொருட்கள் விற்கப்படுவதாக புகார் வந்ததால், புட் செல் எஸ்.பி., ரட்சனா சிங், கடைகளில் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி சிவில் உரிமை பாதுகாப்பு கழகம் புட்செல் எஸ்.பி., ரட்சனா சிங்கை சந்தித்து, புதுச்சேரி நகர பகுதிகளில், காலாவதியான உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாகவும், போதிய விழிப்புணர்வு இல்லாத மக்கள் அவற்றை வாங்கி பயன்படுத்துவதால், உடல் நலம் பாதிப்பு, உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில், புட் செல் எஸ்.பி.,ரட்சனா சிங், புதுபஸ்டாண்டில் உள்ள கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்கப்படுகிறதா என, சோதனை செய்தார்.தொடர்ந்து ரெட்டியார்பாளையம், வில்லியனுார் சாலையில் உள்ள பேக்கரி கடைகளிலும் சோதனை நடத்தி, உணவு பொருட்களை ஆய்வு செய்தனர். மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 வரை சோதனை நீடித்தது.நாளை 28 ம்தேதி முதல் காலாவதியான பொருட்கள் தொடர்பாக தொடர் சோதனை நடத்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Advertisement