பொதுமக்கள் காலை 5 மணிக்கு எழுந்து நடைபயிற்சி செய்ய தானியங்கி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
பேரூராட்சி அலுவலகத்தில் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த மின்னொலி சங்கு சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இதனை திறந்து வைத்த பின் பேசிய அமைச்சர், பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஏதுவாக, காலை 5 மணிக்கு எழுந்து நடைபயிற்சி செல்வதற்கு வாட்ஸ்ஆப் மூலம் தானியங்கி திட்டம் உருவாக்கப்படும் என்றார். இதனைத்தொடர்ந்து சிவன் கோயில் ஊரணியை ஆய்வு செய்த அவர், சேதமடைந்த கரையை சீரமைத்து தருவதாக உறுதியளித்தார்.
இதையும் படிக்க: துபாயில் ரூ.1600 கோடி முதலீட்டு ஒப்பந்தம் – தொழில் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் அழைப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM