புதுச்சேரி : காவலர் தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 4ம் தேதி துவங்கி 7ம்தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை கோரிமேடு போலீஸ் மைதான சமுதாய நலக்கூடத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி வரும் 4ம் தேதி 103 பேர், 5ம் தேதி 100 பேர், 6ம் தேதி 100 பேர், 7ம் தேதி 87 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வர அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு தினசரி காலை 9 மணிக்கு துவங்குகிறது.சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருபவர்கள் பிறந்த சான்றிதழ், கல்வி தகுதிக்கான சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ், சாதி சான்றிதழ், புகைப்படங்கள் உள்ளிட்ட ஒரிஜனல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.
மேலும் ஒரிஜனல் சான்றிதழ்களை ஜெராக்ஸ் சான்றிதழ்களையும் சுய கையொப்பமிட்டு சமர்ப் பிக்க வேண்டும். இந்த சுய கையொப்பத் திற்கான படிவத்தினை http://www.police.pondicherry.gov.in என்ற இணைய முகவரியில் மூன்று டவுண்லோடு செய்து, அண்மை யில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறினால், உத் தேச தேர்வு ரத்தாகிவிடும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
Advertisement