கிசுகிசு வந்தால் ஜாலி… வாணி போஜன்
சின்னத்திரையின் நயன்தாரா என பட்டம் பெற்று, சீரியல்களில் கட்டம் கட்டி கலக்கி, மெருகேறிய அழகோடு தமிழ் சினிமாவில் களமிறங்கி, ரசிகர் பட்டாளங்களை பரவசமாக்கும் பேரழகி நடிகை வாணி போஜன் மனம் திறக்கிறார்….
* சின்னத்திரை டு பெரிய திரை வரவேற்பு
பெரிய திரை அப்படியே மாறியிருக்கு. எந்த வித்தியாசமும் இல்லை நிறைய பேருக்கு எளிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. பிரியா பவானிக்கு பின் எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கு.. என்ன மாதிரி இன்னும் நிறைய பேர் வராங்க. சந்தோஷமான விஷயம்
* தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்புகள்
தமிழ் பேசும் நடிகைகள் தங்கள் படங்களுக்கு வேண்டும் என்று நினைப்பவர்கள், கண்டிப்பாக தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு தராங்க. அவங்க கதையில் என்ன யோசிக்கிறாங்கனு இயக்குனருக்கு தானே தெரியும்.
|
* டூயட் பாடல்களுக்கு மட்டும் ஹீரோயினா
நான் சும்மா வந்து டூயட் பாடிட்டு போகாமல். அந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புகள் இருக்கான்னு பார்த்து நடிக்கிறேன். கதை நல்லா இருந்தாலே இயக்குனரிடம் ஏதோ இருக்கு, சொன்ன மாதிரி பண்ணிடுவார்னு நம்பிக்கை வரும். அதையும் பார்ப்பேன்
* வாணி போஜனின் நோக்கம், குறிக்கோள்
வரிசையா 10 படம் பண்ணனும் அப்படிங்கிறத விட ஒரு படம் பண்ணினாலும் மக்கள் மறக்க கூடாது. அப்படி ஒரு கதை உள்ள படமாக பண்ணனும்னு ஆசை..இப்போ வரை 'ஓ மை கடவுளே' படத்தை மக்கள் சொல்லிட்டே இருக்காங்க.
|
* எதிர்காலத்தில், நடிப்பை விட இயக்கம்
ரொம்ப ஆர்வம் இருக்கு… ஆனால் நடிக்க வந்த பின் தான் தெரிஞ்சது இயக்குனர் வேலை ரொம்ப பெருசுன்னு. அதனால இப்போதைக்கு நடிக்கிறதோட நிறுத்தி கொள்வது நல்லதுனு நினைக்கிறேன்.
* நடிக்க வந்தாலே கிசுகிசுக்கள் வருமே
நான் அதை சீரியஸாக எடுத்துக்க மாட்டேன். கிசுகிசு வந்தால் ஜாலியா தான் எடுத்துப்பேன். முதல் முறை ஏதோ வந்த போது கஷ்டப்பட்டேன். இப்ப வீட்டில் கூட சொல்லி வைச்சிட்டேன். கிசுகிசு வந்தால் வருத்த படாதிங்கனு .
|
* உங்களது பிட்னஸ் ரகசியங்கள் என்ன
5 ஆண்டுகளாக யோகா செய்றேன். வெளியூர் படப்பிடிப்பு போனா செய்ய முடியாது. ஆனால் நேரம் கிடைக்கும் போது யோகாவிற்கு நிறைய நேரம் செலவிடுகிறேன்