தாவணகரே, : தாவணகரே நகர் மக்களின் குடிநீருக்காக மேற்கொள்ளும் ஏரி சீரமைப்பு பணிகள் தரமாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி ஆய்வு செய்ய, ‘ஸ்மார்ட் சிட்டி’ பொறியாளர்கள் நேற்று வந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே மாநில அமைச்சராக இருந்த போது, தாவணகரேவின் குந்தவாடா ஏரி நன்றாக இருந்தது. ஏரி அபிவிருத்திக்கு அவர் பல நடவடிக்கைகள் எடுத்தார்.
மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில், ஆர்வம் காண்பித்தார்.தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர், நடைபயிற்சியாளர்கள், பொது மக்கள் இந்த பகுதிக்கு வருகின்றனர். வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமிருக்கும்.புகார் ஏரியில் மண் நிரம்பியதால், தண்ணீர் சேகரிப்பு குறைந்துவிட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஏரியை சீரமைத்து துார் வாரும் பணிகள் நடக்கின்றன. பணிகள் மந்தமாக நடப்பதுடன், தரமானதாக இல்லையென புகார் வந்துள்ளது.எனவே, ஸ்மார்ட் திட்டத்தின் பொறியாளர்கள், நேற்று காலை, ஏரி பணிகளை பார்வையிட வந்தனர். அப்போது நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பலரும், ”ஏரி சீரமைப்பு பணிகள் தரமாக இல்லை. ஜூன் இறுதியில் பணிகளை முடிப்பதாக கூறுகின்றனர். ஆனால் பணிகள் நடக்கும் வேகத்தை பார்த்தால், ஜூனில் முடிவது சந்தேகம்.பணிகள் பாக்கி”கல் இருக்கைகள் பொருத்துவது, புல் தரை விரிப்பு அமைப்பது, செடிகள் நடுவது உட்பட, பல பணிகள் பாக்கியுள்ளது. இப்பணிகள் மழைக்காலத்துக்குள் முடியும் வாய்ப்பு குறைவு. ”அதிகாரிகள் வெறும் வாய் வார்த்தையில் சொல்வதை விட, செயலில் காண்பிக்க வேண்டும்” என வலியுறுத்திஉள்ளனர்.
Advertisement