கோலாகலமாக துவங்குகிறது ஆஸ்கர் விருது வழங்கும் விழா| Dinamalar

லாஸ் ஏஞ்சலஸ் : இந்த ஆண்டிற்கான, 94வது ‘ஆஸ்கர்’ விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கோலாகலமாக துவங்குகிறது.

ஆஸ்கர் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள், நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரது கடைசி கட்ட நாமினேஷன் பட்டியல் கடந்த பிப்ரவரியில் ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர், பேஸ்புக், யு டியூப் தளங்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேர்வு பெற்றவர்களுக்கு விருதுக்கு வழங்கும் விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி திரையரங்கில் கோலாகலமாக துவங்குகிறது. இதில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இவ்விழாவில் ஆவணப்படம், உள்ளிட்ட எட்டு பிரிவுகளுக்கு, விருதுகள், மற்றும் பிரதான விருதுகளை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.