உடுப்பி, : ”கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் ‘சலாம்’ மங்களாரத்தி எழுத்துபூர்வ ஆதாரமில்லை. செவி வழி செய்தி மட்டுமே பேசப்படுகிறது,” என கொல்லுார் மூகாம்பிகை கோவில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் அடிகா தெரிவித்தார்.உடுப்பி கொல்லுார் மூகாம்பிகை கோவில், உலகளவில் பிரசத்தி பெற்றது.
இக்கோவிலில் தினமும் இரவு 8:00 மணிக்கு ‘பிரதோச மங்களாரத்தி’ அல்லது ‘பிரதோஷ பூஜை’ நடத்தப்பட்டு வருகிறது.திப்பு சுல்தான் இக்கோவிலுக்கு வந்து சென்ற பின், ‘சலாம்’ மங்களாரத்தி என கூறப்பட்டு வந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விஸ்வ ஹிந்து பரிஷத், ‘சலாம்’ என்பதற்கு பதிலாக, ‘கடவுள்’ பெயரில் மஹா மங்களாரத்தி நடக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இந்நிலையில், கொல்லுார் மூகாம்பிகை கோவில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் அடிகா வெளியிட்டுள்ள அறிக்கை:கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் தினமும், காலை, மதிய நேரத்தில் பிரதோஷ பூஜை நடக்கிறது.
இது மிகவும் அர்த்தமுள்ள பூஜை.பிரதோஷ காலத்தின் போது அனைத்து தெய்வங்களும் பிரசன்னமாக இருப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் பிரதோஷ காலத்தில் நடக்கும் பூஜைகள் தனித்தன்மை வாய்ந்தவை. அந்த நேரத்தில் நாங்கள் தேவிக்கு பூஜை செய்கிறோம்.கோவிலில் நடந்த பூஜையில், திப்பு சுல்தான் பங்கேற்றார். பிரதோஷ பூஜையின் போது ‘சலாம்’ வைத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இது ஒரு செவிவழிச் செய்தி. ஆனால் பிரதோஷ பூஜை அல்லது பிரதோஷ மங்களாரத்தி என்று அழைக்கப்படும் பூஜைக்கு அதன் சொந்த மத முக்கியத்துவம் உள்ளது.இது ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை பின்பற்றப்படுகிறது. பூஜையின் போது, நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் திப்பு பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதனால் பூஜைக்கு அவர் பெயர் வந்திருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement