சாமானியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா.. தங்கம் விலை குறையுமா..?

தங்கம் விலையானது இனி எப்படி இருக்கும் குறையுமா? குறையாதா? கடந்த வாரத்தில் அனைத்து முக்கிய லெவல்களையும் உடைத்துக் காட்டியுள்ள நிலையில், வரும் வாரத்தில் எப்படி இருக்கும்?

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் கடந்த வாரத்தில் விலை பெரியளவில் ஏற்றம் காணாவிட்டாலும், விலையானது சற்று ஏற்றத்திலேயே காணப்பட்டது.

எனினும் சமீபத்திய உச்சத்தில் இருந்து 3600 ரூபாய்க்கு மேலாக சரிவில் தான் காணப்படுகின்றது. இதே வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போதும் 4300 ரூபாய் சரிவில் தான் காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமா? அடுத்து என்ன செய்யலாம். கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

29ல் 12 பங்குகள் 100% மேல் லாபம்.. கொட்டிக் கொடுத்த டாடா குழுமம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி

காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஏற்றத்தில் காணப்பட்டாலும், வார இறுதியில் சற்று சரிவிலேயே முடிவடைந்தன. இதற்கிடையில் இந்திய சந்தையில் தங்கத்தின் நடப்பு காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் வரும் வாரத்தில் புராபிட் புக்கிங் செய்யலாம். அடுத்த காண்டிராக்டில் ரோல் ஓவர் செய்யலாம். இதனால் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம். மொத்தத்தில் நடப்பு காண்டிராக்டில் விலை சரிவினைக் காணலாம். எனினும் இது ஜூன் காண்டிராக்டுக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை

இன்று வரையில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சு வார்த்தையானது சுமூக நிலை எட்டப்படவில்லை. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம். தொடர்ந்து அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக இவ்விரு நாடுகளின் பொருளாதாரம் மட்டும் அல்ல, இவ்விரு நாடுகளை சார்ந்துள்ள பல நாடுகளும் தாக்கத்தினை எதிர் கொண்டுள்ளன. ஆக இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை நோக்கில் முதலீட்டாளர்களை நகர வைத்துள்ளது.

ரஷ்ய அதிபரின் சலுகை
 

ரஷ்ய அதிபரின் சலுகை

தொடர்ந்து போர் பதற்றத்தின் மத்தியில் ரஷ்யாவின் ஆணிவேரான எண்ணெய் வணிகத்திலேயே பல நாடுகளும் கைவைத்துள்ளன. ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் காரணமாக, பல நாடுகளும் ரஷ்யாவுடன் வணிகம் மேற்கொள்ள யோசித்து வருகின்றன. இதற்கிடையில் இழந்து வரும் பொருளாதாரத்தினை தக்க வைத்துக் கொள்ள ரஷ்யாவின் அதிபர் ரஷ்யாவுடன் நட்பில்லாத நாடுகள் ரூபிளில் இயற்கை எரிவாயுவினையும் மற்றும் கச்சா எண்ணெய்-யும் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இது மேலும் எரிபொருள் விலையை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

முக்கிய சப்போர்ட்

முக்கிய சப்போர்ட்

இதற்கிடையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலாக அவுன்ஸூக்கு 1850 டாலர்ளையும், இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 48,800 ரூபாயினையும் கணித்துள்ளனர். இது வலுவான சப்போர்ட் லெவலாக பார்க்கப்படுகிறது. ஒரு வேளை வரும் வாரத்தில் தங்கம் விலையானது, இந்த அளவுக்கு குறைந்த விலையில் கிடைத்தால் நீண்டகால் நோக்கில் வாங்க சிறந்த இடமாகவும் பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் அதிகரிக்கலாம்

பணவீக்கம் அதிகரிக்கலாம்

தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக இந்திய உள்ளிட்ட பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல், கேஸ் விலையானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமான பணவீக்கம் மீண்டும் சர்வதேச அளவில் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கத்தின் விலையானது உச்சம் தொட காரணமாக அமையலாம்.

நேட்டோவின் கடும் எச்சரிக்கை

நேட்டோவின் கடும் எச்சரிக்கை

ரஷ்யா மேற்கொண்டு உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால், அதனை நேட்டோ நாடுகள் வேடிக்கை பார்க்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுவரையில் இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் பிரச்சனையானது, மேற்கொண்டு இன்னும் பெரும் போராக வெடிக்கலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. அப்படி நடந்தால், அதனால் உலகப் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.

மானிட்டரி கொள்கைகளின் அழுத்தம் இருக்கலாம்

மானிட்டரி கொள்கைகளின் அழுத்தம் இருக்கலாம்

தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலையில் அமெரிக்காவின் மானிட்டரி கொள்கைகள் அழுத்தத்தினை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வட்டி விகிதம் அதிகரிப்பு, பத்திர சந்தை, அமெரிக்க டாலரின் மதிப்பு என பலவும் தங்கம் விலையினை பெரியளவில் ஏற்றம் காணாமல் தடுக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக வரும் வாரத்தில் காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால் உச்சத்தில் புராபிட் புக்கிங்கும் இருக்கலாம். இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்.

சர்வதேச பொருளாதாரம்

சர்வதேச பொருளாதாரம்

சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது ஏற்கனவே விலைவாசியினை பெரும் அளவில் தூண்டியுள்ளது. இது இன்னும் எத்தனை காலத்திற்கு தொடருமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.

எவ்வளவு ஏற்றம் காணலாம்

எவ்வளவு ஏற்றம் காணலாம்

தங்கம் விலையானது வரும் வாரத்திம் ஏற்றம் கண்டால் அது 2000 டாலர்களை உடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதற்கு மேலாக ஏற்றம் காணும் போது 2030 – 2040 டாலர்களையும் உடைக்கலாம். இதே கீழாக 1895 டாலர்களை சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். இது கடந்த வாரத்தில் தொட்ட நிலையில், இதனையே சப்போர்ட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு

தங்கம் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 7 கூட்டமைப்பு சார்பில், ரஷ்யா மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் வீழ்ச்சி கண்டு வரும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தங்கத்தை பயன்படுத்தலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜி7 நாடுகள் ரஷ்யாவின் மத்திய வங்கி பரிவர்த்தனைகளில் தங்கத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளன. முன்னதாக ரஷ்யா தனது நிதி பற்றாக்குறைக்கு தங்கத்தினை விற்பனை செய்யலாம். அதன் மூலம் ஈடு கட்டலாமென்று எதிர்பார்க்கப்பட்டது. இதனல் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜி7 நாடுகளின் கட்டுப்பாட்டினால் இனி அதுவும் நடக்காது என்பதால், தங்கம் விலையில் தற்போதைக்கு பெரியளவிலான சரிவு இருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையும் இன்று மாற்றமின்றி காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 4844 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 38,752 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று 8 கிராமுக்கு 42,272 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே ஆபரண வெள்ளி விலையும் இன்று மாற்றமின்றி ணப்படுகின்றது. இது கிராமுக்கு 73.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 734 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 73,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், கடந்த வார இறுதியில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும் மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on march 27th 2022: Will the price of gold give the common man a chance again?

gold price on march 27th 2022: Will the price of gold give the common man a chance again?/சாமானியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா.. தங்கம் விலை குறையுமா..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.