சித்தூர்:
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூர் நகரி அருகே உள்ள கிராமத்திற்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 52 பேர் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
பக்ராபேட் என்ற இடத்தில் சென்ற போது அந்த பேருந்து கவிழ்ந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்தது. நேற்றிரவு நிகழ்ந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பள்ளத்தாக்கு 50 அடி ஆழம் உள்ள நிலையில் இரவு நேரமானதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன. அதிகாலையிலும் மீட்பு பணி தொடர்ந்தது. உயிர் பிழைத்தவர்கள் பள்ளத்தாக்கில் இருந்து கயிறுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
டிரைவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும், திருப்பதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்… திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு அலைமோதும் பக்தர்கள் கூட்டம்