
சிம்பு படத்தில் இணைந்த மலையாள நடிகர்
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் சிம்புவுடன் சித்தி இட்னானி , ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ .ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ஜெயமோகன் இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது மலையாள நடிகர் நீரஜ் மகாதேவன்இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இப்படத்தில் ஸ்ரீதரன் என்ற வேடத்தில் நடிக்கிறார். சிம்பு நீரஜ் மகாதேவன் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.