சீனாவில் விபத்துக்குள்ளான போயிங் ரக விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்ததாக சீன அரசு அறிவித்துள்ளது.
ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குவாங்சோ நகரை நோக்கி சென்ற போது, மலைகள் நிறைந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.
இந்நிலையில், விமானத்தில் பயணித்த 123 பயணிகள், 9 விமான ஊழியர்களும் உயிரிழந்து விட்டதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த 120 பேரின் டி.என்.ஏ. அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.