பசல்: சுவிஸ் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் சிந்து, பிரனாய் முன்னேற்றனர்.
சுவிட்சர்லாந்தில், சுவிஸ் ஓபன் ‘சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங் மோதினர். முதல் செட்டை 21-18 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 15-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 21-19 என போராடி வென்றார். ஒரு மணி நேரம், 18 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய சிந்து 21-18, 15-21, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
பிரனாய் பிரமாதம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரனாய், இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகா ஜின்டிங் மோதினர். ஒரு மணி நேரம், 12 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய பிரனாய் 21-19, 19-21, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இவர், ஐந்து ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக சர்வதேச அரங்கில் பைனலுக்கு முன்னேறினார். கடைசியாக 2017ல் நடந்த யு.எஸ்., ஓபனில் பைனல் வரை சென்ற இவர், சகவீரர் காஷ்யப்பை வீழ்த்தி கோப்பை வென்றிருந்தார்.
Advertisement