டெல்லியில் எலக்ட்ரானிக் சிட்டி.. 80000 பேருக்கு வேலை..!

தமிழ்நாட்டைத் தொடர்ந்து டெல்லி அரசு 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைச் சனிக்கிழமை வெளியிட்டது. டெல்லி அரசின் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் பலரின் கவனத்தையும் ஈர்த்து இந்த எலக்ட்ரானிக் சிட்டி திட்டம் தான்.

பெங்களூரில் தானே எலக்ட்ரானிக் சிட்டி அப்புறம் என்ன இது என நீங்கள் கேட்பது புரிகிறது. இது முற்றிலும் வேறு வாங்கப் பார்ப்போம்.

மார்ச் 28 – 29 தேதிகளில் நாடு தழுவிய ஸ்டிரைக்.. என்னவெல்லாம் பாதிக்கும்..?

மனிஷ் சிசோடியா

மனிஷ் சிசோடியா

டெல்லியில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சனிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் புதிதாக ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

எலக்ட்ரானிக் சிட்டி

எலக்ட்ரானிக் சிட்டி

இப்புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் உற்பத்தி தளத்தைப் பப்ரோலா-வில் மின்னணு அமைக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரானிக் சிட்டி மூலம் 80,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்தார்.

90 ஏக்கர்
 

90 ஏக்கர்

இத்திட்டத்தின் கீழ் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் ப்ளக் அண்ட் ப்ளே உற்பத்தி தளத்தை அமைத்து உலக நாடுகளில் இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்களை அமைக்கத் திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் தனது உற்பத்தி தளத்தை டெல்லியில் எளிதாக அமைக்க முடியும்.

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

மேலும் இந்த எலக்ட்ரானிக் சிட்டி அமைப்பதன் மூலம் பல புதிய ஐடி நிறுவனங்களும் தனது அலுவலகத்தை இப்பகுதியில் அமைக்க அழைப்பு விடுத்து ஈர்க்க திட்டமிட்டு உள்ளதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

ரூ.75,800 கோடி பட்ஜெட்

ரூ.75,800 கோடி பட்ஜெட்

2022-23 நிதியாண்டுக்கான ரூ.75,800 கோடி பட்ஜெட் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் அளவு ரூ.69,000 கோடி. 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அளவு முந்தைய ஆண்டை விட 9.86 சதவீதம் அதிகமாகும். ஆம் ஆத்மி அரசின் எட்டாவது தொடர் பட்ஜெட் இது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Delhi govt announced to set up electronic city to create 80000 jobs in budget 2022

Delhi govt announced to set up the electronic city to create 80,000 jobs in budget 2022 டெல்லியில் எலக்ட்ரானிக் சிட்டி.. 80000 பேருக்கு வேலை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.