ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றால், உடனடியாக உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலை எதிர்த்து மேற்கு நாடுகள் 1,000க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் மீது தனிப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில், Sunday Telegraph செய்தி சேனலுக்கு பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் அளித்த பேட்டியில், ரஷ்யாவின் மீது விதிக்கப்ட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றால் உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலை முழுமையாக நிறுத்த வேண்டும் மற்றும் வருங்காலத்திலும் இது போன்ற தாக்குதலை முன்னெடுக்க மாட்டோம் என்ற உத்திரவாதத்தை ரஷ்யா வழங்க வேண்டும்.
இவ்வாறு ரஷ்யா செய்யாதவரை அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை திரும்ப பெற முடியாது மற்றும் இத்தகைய பொருளாதார தடையே ரஷ்யாவின் கடிவாளம்(hard lever) என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய லிஸ் டிரஸ், பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தீவிரமாக இருப்பதாக கருதி, அந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு உதவும் குழு ஒன்று அமைக்கபட்டது, ஆனால் தற்போது ரஷ்யா பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டுவதாக தெரியவில்லை.
இதனால் தான் ரஷ்யாவின் மீதான பொருளாதார தடையை மேலும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யா இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளும் திரைக்கு பின்னால் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைளை மறைத்து ரஷ்ய வீரர்களை போர்க்களத்தில் ஒருங்கிணைக்கும் முயற்சியாக தான் லிஸ் டிரஸ் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற நடவடிக்கைகளால் அமைதியை நிலைநாட்ட மேற்கு நாடுகள் கடுமையாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் உறவை கைவிட்டால்… பேச்சுவார்த்தையை யார் முன்னெடுப்பது? துருக்கி அதிரடி