தனுஷ் மாதிரியே அதிரடி முடிவு எடுத்த பாலாவின் மாஜி மனைவி

இயக்குநர் பாலாவுக்கும், தேனியை சேர்ந்த முத்துமலருக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் 18 ஆண்டுகள் கழித்து பாலாவும், முத்துமலரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். கடந்த 4 ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளனர்.

என் பொண்டாட்டியை நாசமாக்குனதே ‘அவங்க’ தான்: பாலா திடுக் தகவல்
மனைவியை பிரிந்த
பாலா
, சூர்யா படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் முத்துமலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கப் போகிறது என்று தகவல் வெளியானது. அந்த தகவலில் உண்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது,

வளர்ந்த மகளை வைத்துக் கொண்டு மறுமணம் பற்றி யோசிக்கக் கூட விரும்பவில்லையாம்
முத்துமலர்
. ஒரு முறை திருமணம் செய்து பட்ட கஷ்டமெல்லாம் போதும். இனி என் வாழ்க்கையில் திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறாராம் முத்துமலர். அவரின் இந்த முடிவுக்கு குடும்பத்தாரும் ஆதரவாக இருக்கிறார்களாம்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்த
தனுஷ்
, இனி தன் வாழ்க்கையில் திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று அப்பா கஸ்தூரி ராஜாவிடம் கூறியிருக்கிறாராம். முத்துமலரும், தனுஷை போன்றே முடிவு எடுத்திருக்கிறார்.

அடுத்த செய்திDhanush:இருக்குற பிரச்சனை போதாதுனு தனுஷை தேடி வந்த புது ஏழரை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.