வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், 29-ந் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
30, 31ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேக்கடி மற்றும் ராசிபுரத்தில் தலா 3 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.