தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் விறுவிறுப்பு- சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

சென்னை:

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கான அ.தி.மு.க. 3-வது கட்ட அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வலுவான நிலையில் ஆட்சியை பிடித்த அ.தி.மு.க. கடந்த சட்டசபை தேர்தலின்போது தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து கட்சியை பலப்படுத்த அ.தி.மு.க. மேலிடம் முடிவு செய்தது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்
எடப்பாடி பழனிசாமி
ஆகியோர் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த முடிவு செய்தனர்.

சட்ட திட்ட விதி 30, பிரிவு 2-ன்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி நடத்த வேண்டும்” என்ற விதிமுறைக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக்கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்டக்கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான அமைப்புத் தேர்தல்கள் நடத்தப்பட்டது.

முதல்கட்டமாக கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தென்காசி வடக்கு, தெற்கு, ஈரோடு புறநகர் மேற்கு, சேலம் மாநகர், சேலம் புறநகர், திருநெல்வேலி, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நீலகிரி, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, நாமக்கல், விழுப்புரம், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, காஞ்சிபுரம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த டிசம்பர் 13, 14-ந்தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

2-வது கட்டமாக தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, திருவாரூர், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, திருச்சி புறநகர் தெற்கு, திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு,கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் புறநகர் மேற்கு

தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர் மாநகர், திருப்பத்தூர், வேலூர் புறநகர், கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ராணிப்பேட்டை, வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு),

சென்னை புறநகர், தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), திருப்பூர் மாநகர், தென் சென்னை தெற்கு (கிழக்கு), திருப்பூர் புறநகர் கிழக்கு, தென் சென்னை தெற்கு (மேற்கு) ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 22, 23-ந்தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

இதை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டதால் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் தள்ளிப்போனது. அதன் தொடர்ச்சியாக 3-வது கட்டமாக ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெற்றது.

ராணிப்பேட்டை, வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, கள்ளக்குறிச்சி, சேலம் புறநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, திருப்பூர் மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு, கரூர், கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தப்பட்டது.

ஒன்றியம், நகரம், பேரூராட்சி செயலர் பதவிக்கு கட்டணமாக ரூ,.5 ஆயிரம், மற்ற பதவிகளுக்கு ரூ.2 ஆயிரம், பகுதி செயலர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், பகுதியில் மற்ற பதவிகளுக்கு ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் ஓமலூரில் 2 இடங்களில் நடைபெற்றது. இதை கழக இணை ஒருங்கிணைப்பாளர்
எடப்பாடி பழனிசாமி
பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.கே. வைரமுத்து, தாமரை ராஜேந்திரன், இளவரசன் ஆகியோர் செயல்பட்டனர்.

அவர்களிடம் தேர்தல் பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விவரம் கேட்டறிந்தார்.

கோவை மாவட்ட அ.தி.மு.க. கோவை மாநகர் மாவட்டம், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், கோவை புறநகர் வடக்கு மாவட்டம் என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நகர செயலாளர், பகுதி செயலாளர், ஒன்றிய செயலாளர், பேரூராட்சி செயலாளர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மாநகரில் உள்ள 17 பகுதி செயலாளர்களுக்கான தேர்தல் கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. மற்ற இடங்களுக்கான தேர்தல் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 55-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.வில் 4 நகர செயலாளர், 11 பேரூராட்சி செயலாளர், 14 ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட உட்கட்சி பதவிகளுக்கான தேர்தல் இன்று நடந்தது. மொத்தம் 29 இடங்களில் தேர்தல் பொறுப்பாளர்களான வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ், அமைப்பு செயலாளர் ஆசைதம்பி, செய்தி தொடர்பாளர் சசிரேகா ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.

கரூர் மாவட்ட அ.திமு.க. அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளருமான வரகூர் அருணாசலம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் பதவிகளுக்கு போட்டியிடுவோர் மனுதாக்கல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது.

மாவட்டத்தில் மொத்தம் 3 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் பகுதிக்கு காங்கயம் சாலையில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மற்றும் அலெக்சாண்டர் செயல்பட்டனர்.

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கான தேர்தல் உடுமலையில் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி.,ஹரி பொறுப்பாளராக இருந்து தேர்தலை நடத்தினர். தாராபுரம், பல்லடம் பகுதிகளுக்கான அமைப்பு தேர்தல் பல்லடத்தில் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஈரோடு மாவட்ட அ.தி.மு.க ஈரோடு மாநகர் மாவட்டம், புறநகர் மேற்கு மாவட்டம், புறநகர் கிழக்கு மாவட்டம் என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பகுதி செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது.

மாநகரில் உள்ள 9 பகுதி செயலாளர்களுக்கான தேர்தல் ஈரோட்டில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் முன்னிலையில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன், பாண்டியன் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.

இதேபோல் ஈரோடு ஒன்றியம், மொடக்குறிச்சி ஒன்றியம், கொடுமுடி ஒன்றியம் ஆகியவற்றுக்கான தேர்தலும் நடந்தது. இதனையடுத்து 15 பேரூராட்சிகளுக்கான செயலாளர் பதவிக்கான தேர்தல் அந்தந்த பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடந்தது.

இதேபோல் நகர செயலாளர்களுக்கான தேர்தல் நடந்தது. புறநகர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பொறுப்பாளர்கள் தேர்தல் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. முன்னிலையில் முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 ஒன்றியங்கள் உள்ளன. இதில் 6 ஒன்றியங்களுக்கான அ.தி.மு.க உள்கட்சி தேர்தல் கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மீதமுள்ள 5 ஒன்றியங்களுக்கான தேர்தல் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.