மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மவுரியா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்துக்கு பதில் உரை வழங்கிய நிதி அமைச்சர், தமிழகம் ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் என்பதையே பல்வேறு ஆய்வுகள் காட்டுவதாகத் தெரிவித்தார்.
உயர்கல்வி படிப்பவர்கள், வீடு, செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் வைத்திருப்போர் எண்ணிக்கையைக் கொண்டு ஒரு மாநிலம் வளர்ந்த மாநிலமா, ஏழை மாநிலமா என்று முடிவுக்கு வர முடியுமா? என்ற கேள்வி நமக்குள் இயல்பாக எழுகிறது.
உண்மையான தமிழகத்தைத்தெரிந்து கொள்ள கிராமப்புறங்களுக்குச் சென்றால்தான் ரூ.100 கூலிக்கு எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்பது போன்ற உண் மைகள் நமக்குப் புரியும்.
தமிழகத்தை வளர்ந்த மாநிலம் என்று சொல்வதன் மூலம், தேர்தல்அறிக்கையின் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 என்ற அறிவிப்பைசெயல்படுத்தாமல் விட்டுவிடலாம் என்ற எண்ணம் இருப்பதாகவே தோன்றுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.