புதுடெல்லி:
இந்திய கடலோர பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது ஆண்டாண்டு காலமாக நீடித்து வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 5-வது கூட்டுக்குழு கூட்டம் நடந்தது. இதில் இலங்கை தரப்பில் மீன்வளத்துறை மந்திரியின் செயலாளர் ரத்தன்நாயக் மற்றும் இந்தியா தரப்பில் மீன்வளத்துறை செயலாளர் ஜகிந்திரநாத் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழக மீன் வளத்துறை பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழக மீனவர்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டன.
அப்போது கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களிடம் இலங்கை படை வீரர்கள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் மீன் பிடி படகுகளை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கையில் இலங்கை கடற்படையினருடன் துணை ராணுவ படையினரை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்… நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்- சென்னையில் நாளை 11 இடங்களில் மறியல்