தயவுசெய்து அதை நிறுத்துங்கள்..! விஜய் – அஜித்திற்கு கோரிக்கை வைத்த பிரபலம்..!

அன்று எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ரசிகர்கள் துவங்கி, இன்று
விஜய்
சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வரை மோதல்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அவர்களுக்குள் போட்டி இல்லையென்றாலும் இவர்களை போட்டி நடிகர்களாகவே பாவித்து ரசிகர்கள் சண்டையில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

இதைப்போல தான்
ரஜினி
மற்றும்
கமல்
, விஜய் மற்றும்
அஜித்
, சிம்பு மற்றும்
தனுஷ்
ரசிகர்களும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது சோஷியல் மீடியாவின் வளர்ச்சியால் இவர்களது மோதல் அடுத்தகட்டத்துக்கு சென்றுள்ளது.

அடிதடி சண்டையில் ஈடுபட்ட ரஜினி..! அதுக்குன்னு இப்படியா ?

அதிலும் குறிப்பாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் நேரில் மோதலில் ஈடுபட்டு வருவது மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவிலும் தகாத வார்த்தைக்காலால் பேசி சண்டையிட்டு வருகின்றனர். முதலில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் படங்களை வைத்து மோதலில் ஈடுபட துவங்கிய அவர்கள் பின்பு அவர்களையே சாடி சண்டையிட்டனர்.

அஜித்தின் பெயரை வைத்து விஜய் ரசிகர்களும், விஜய்யின் பெயரை வைத்து அஜித் ரசிகர்களும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்து வருகின்றனர்.இதனை கண்டிக்கும் வகையில் ஏதேனும் பிரபலம் பேசினால் அவர்களையும் திட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது இதனை நிறுத்திக்கொள்ளும் படி பிரபல ஆடை வடிவமைப்பாளர்
வாசுகி பாஸ்கர்
கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தயவுசெய்து இந்த சண்டையை நிறுத்த அஜித் மற்றும் விஜய் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிடுங்கள். உங்கள் பெயர்களை தவறாக சித்தரித்து பேசிவரும் ரசிகர்களின் மனநிலையை மாற்றவேண்டும்.

அன்பு என்ற பெயரில் ரசிகர்கள் செய்து வரும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அதற்கு நீங்கள் இருவரும் இதனைப்பற்றி ஒரு அறிக்கை விடவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்குமுன் பல பிரபலங்கள் இதை கூறிவந்த நிலையில் தற்போது வாசுகி பாஸ்கரும் கூறியுள்ளார். எனவே இதற்கு விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒரு அறிக்கை விடுவார்கள் என பொதுவான ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு தெரியுமா?

அடுத்த செய்திதனுஷ் வீட்டு விஷயத்தில் 2வது முறையாக ரஜினி தோல்வி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.