கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கோவில் திருவிழாவிற்காக அழைத்துவரப்பட்ட யானைக்கு மதம் பிடித்ததை அடுத்து, வனத்துறையினர் அதனை மயக்க ஊசி செலுத்தி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சேர நல்லூரில் உள்ள பார்த்தசாரதி கோவில் திருவிழாவுக்காக மாராடி ஐயப்பன் என்ற யானை அழைத்து வரப்பட்டது. கோவில் வளாகத்தில் நின்ற யானைக்கு திடீரென மதம் பிடித்த நிலையில், அங்கிருந்த பொருட்களை மிதித்து தூக்கி வீசியதுடன், திருவிழாவுக்கு அமைக்கப்பட்ட மேடையையும் சேதப்படுத்தியது.
மேலும், கோவிலின் பக்கவாட்டு சுவரையும் அந்த யானை இடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. பாகன்களால் யானை கட்டுப்படுத்த முடியாத நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு மயக்க மருந்து செலுத்தி அதனை கட்டுப்படுத்தினர்.