திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள கிராமத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய சென்ற தனியார் பேருந்து 50 அடி வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் சென்ற 7 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயம் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு திருப்பதி ரூயா அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.