ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே திருமண கோஷ்டி சென்று கொண்டிருந்த பேருந்து சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தர்மாவரத்தில் இருந்து 50பேர் அடங்கிய குழுவினர் திருப்பதியில் நடைபெற இருக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
பக்ராபேட்டை மலைப்பாதையில் பேருந்து சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக 200அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.