புதுடில்லி:திரையரங்கு நிறுவனங்களான, ‘பி.வி.ஆர்., மற்றும் ஐநாக்ஸ்’ இணைக்கப்படுகின்றன. இதற்கு இந் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
திரைப்படங்களை திரையிடும் இரண்டு மிகப் பெரிய ‘மல்டிபிளெக்ஸ்’ நிறுவனங்களான, பி.வி.ஆர்., மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைக்கப்படுகின்றன. தற்போது, பி.வி.ஆர்., நிறுவனம், 73 நகரங்களில், 871 திரைகளை வைத்துள்ளது. அதே நேரத்தில் ஐநாக்ஸ் நிறுவனம், 72 நகரங்களில், 675 திரைகளுக்கு உரிமையாளராக உள்ளன.
இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைப்பதற்கு, நிறுவனங்களின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளன. இதன்படி, இந்த நிறுவனங்களின் பங்குகள் மாற்றிக் கொள்ளப்பட உள்ளன. இந்த இணைப்புக்குப் பிறகு, பி.வி.ஆர்., – ஐநாக்ஸ் என்ற பெயரில் புதிய நிறுவனம் செயல்படும். அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள திரையரங்குகளுக்கான பெயர்கள் மாற்றப்படாது. புதிதாக துவக்கப்படும் திரையரங்குகளுக்கு மட்டும் புதிய பெயர் வைக்கப்படும்.
புதுடில்லி:திரையரங்கு நிறுவனங்களான, ‘பி.வி.ஆர்., மற்றும் ஐநாக்ஸ்’ இணைக்கப்படுகின்றன. இதற்கு இந் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.nsimg2993270nsimgதிரைப்படங்களை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.