புதுடில்லி-திரையரங்கு நிறுவனங்களான, ‘பி.வி.ஆர்., மற்றும் ஐநாக்ஸ்’ இணைக்கப்படுகின்றன. இதற்கு இந் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
திரைப்படங்களை திரையிடும் இரண்டு மிகப் பெரிய ‘மல்டிபிளெக்ஸ்’ நிறுவனங்களான, பி.வி.ஆர்., மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைக்கப்படுகின்றன. தற்போது, பி.வி.ஆர்., நிறுவனம், 73 நகரங்களில், 871 திரைகளை வைத்துள்ளது.அதே நேரத்தில் ஐநாக்ஸ் நிறுவனம், 72 நகரங்களில், 675 திரைகளுக்கு உரிமையாளராக உள்ளன.இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைப்பதற்கு, நிறுவனங்களின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளன.
இதன்படி, இந்த நிறுவனங்களின் பங்குகள் மாற்றிக் கொள்ளப்பட உள்ளன. இந்த இணைப்புக்குப் பிறகு, பி.வி.ஆர்., – ஐநாக்ஸ் என்ற பெயரில் புதிய நிறுவனம் செயல்படும்.அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள திரையரங்குகளுக்கான பெயர்கள் மாற்றப்படாது.புதிதாக துவக்கப்படும் திரையரங்குகளுக்கு மட்டும் புதிய பெயர் வைக்கப்படும்.புதுடில்லி, மார்ச் 28-
திரையரங்கு நிறுவனங்களான, ‘பி.வி.ஆர்., மற்றும் ஐநாக்ஸ்’ இணைக்கப்படுகின்றன. இதற்கு இந்நிறுவனங்களின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.திரைப்படங்களை திரையிடும் இரண்டு மிகப் பெரிய ‘மல்டிபிளெக்ஸ்’ நிறுவனங்களான, பி.வி.ஆர்., மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைக்கப் படுகின்றன. தற்போது, பி.வி.ஆர்., நிறுவனம், 73 நகரங்களில், 871 திரைகளை வைத்துள்ளது.அதே நேரத்தில் ஐநாக்ஸ் நிறுவனம், 72 நகரங்களில், 675 திரைகளுக்கு உரிமையாளராக உள்ளன.இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைப்பதற்கு, நிறுவனங்களின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளன. இதன்படி, இந்த நிறுவனங்களின் பங்குகள் மாற்றிக் கொள்ளப்பட உள்ளன. இந்த இணைப்புக்குப் பின், பி.வி.ஆர்., – ஐநாக்ஸ் என்ற பெயரில் புதிய நிறுவனம் செயல்படும்.அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள திரையரங்குகளுக்கான பெயர்கள் மாற்றப்படாது.புதிதாக துவக்கப்படும் திரையரங்குகளுக்கு மட்டும் புதிய பெயர்வைக்கப்படும்.
Advertisement