சியோல்:
ஆசிய நாடுகளை கொரோனா திணறிடித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவின் முதல் அலையின்போதே அதை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்த சீனா, தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன. தென்கொரியாவில் நேற்று ஒரு நாளில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 479 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 1 கோடியே 14 லட்சத்து 97 ஆயிரத்து 711 ஆக உயர்ந்தது.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் நேற்று 1 லட்சத்து 3 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் அந்த நாட்டின் மொத்த பாதிப்பு 89 லட்சத்தை கடந்துள்ளது.
நியூசிலாந்தில் 14 ஆயிரத்து 175 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், சீனாவில் 1,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.