திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் படி, விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இக்கோவிலில் கடந்த 9ம் தேதி நீதிமன்ற உத்தரவின் படி, 250 ரூபாய் மற்றும் 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு விசாரணையின் போது, விஐபி பாஸ் வழங்கப்படுவதற்கு மதுரைக் கிளை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
காவல்துறையினர், வருவாய்த்துறையினர், இந்து அறநிலையத் துறையினர் சிறப்பு தரிசனம் பெற அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டார்.
அதன் படி விஐபி பாஸ் வழங்குவது ரத்து செய்யப்பட்டதாக கோவிலின் பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் 100 ரூபாய் கட்டண வரிசை அல்லது பொது தரிசன வரிசையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.