நெய்வேலி என்.எல்.சி-யில் 300 பணியிடங்கள்; பி.இ படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!

NLC india recruitment 2022 for 300 Graduate Executive Trainee: தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 300 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், பட்டதாரி நிர்வாக பயிற்சியாளர் (Graduate Executive Trainee) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Graduate Executive Trainee

காலியிடங்களின் எண்ணிக்கை: 300

Mechanical Engineering – 117

Electrical & Electronics Engineering – 87

Civil Engineering – 28

Mining Engineering – 38

Geology Engineering – 6

Control & Instrumentation Engineering – 5

Chemical Engineering – 3

Computer Science and Engineering – 12

Industrial Engineering – 4

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Degree in Engineering or Technology முடித்திருக்க வேண்டும். மேலும் 2022 ஆம் ஆண்டின் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 50,000 – 1,60,000

வயதுத்தகுதி: 01.03.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

இதையும் படியுங்கள்: அரசு பள்ளிகளில் 2774 முதுகலை ஆசிரியர் வேலை; தற்காலிக நியமனம்

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பயிற்சி பணியிடங்களுக்கு GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க http://www.nlcindia.in  அல்லது https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.854, SC/ST, மாற்றுதிறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ. 354.

விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/advt/GET-MAR-2022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.