காத்மண்டு,
சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ இன்று நேபாள நாட்டிற்கு சென்றார். நேபாள அதிபர் பித்யதேவியை சீன வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது, வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், சீன வெளியுறவுத்துறை மந்திரி கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவுக்கும் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.