படிவம் 26AS என்றால் என்ன.. இதனை எப்படி பதிவிறக்கம் செய்வது.. இதன் பயன் என்ன..!

படிவம் 26AS பற்றி பலரும் கேள்வி பட்டிருக்கலாம். இது வரி செலுத்துபவருக்கு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படிவம் 26AS வரி செலுத்துவோரின் நிதி பரிவர்த்தனைகளை பற்றிய கூடுதல் தகவல்களை கொண்டு இருக்கும். இது ஒரு வருடாந்திர வரி அறிக்கையாகும்.

இந்த படிவம் 26AS டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் உள்ளிட்டவற்றின் விவரங்களை பார்க்க உதவுகிறது.

அதெல்லாம் சரி இது எதற்காக பயன்படுகின்றது. இதனை எப்படி டவுன்லோடு செய்வது? ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியுமா? வாருங்கள் பார்க்கலாம்.

என்னென்ன பார்க்கலாம்?

இந்த படிவம் 26Aல் டிடிஎஸ், டிசிஎஸ் உள்ளிட்ட தகவல்களை பார்க்க முடியும். இது தவிர முன் கூட்டியே வரி செலுத்துதல், அசெஸ்மென்ட், தனி நபரின் வருமான ஆதாரங்கள் பற்றிய தகவல்கள், மாதம் சம்பளம், முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானம், ஓய்வூதியம், வரி ரீபண்ட் கிடைத்தது, மியூச்சுவல் ஃபண்ட் வாங்குதல், டிவிடெண்டுகள், அசையா சொத்துகள் உள்ளிட்ட பல விவரங்களும் அதில் இருக்கும்.

எப்படி டவுன்லோடு செய்வது?

incometax.gov.in/iec/foportal என்ற பக்கத்திற்கு செல்லவும்.

அதில் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்து கொள்ளவும்.

லாகின் செய்த பிறகு அங்கு efile என்ற ஆப்சனில் இருந்து, Icome tax Returns என்ற ஆப்சனையும் கிளிக் செய்யவும்.

 படிவம் 26AS என்றால் என்ன.. இதனை எப்படி பதிவிறக்கம் செய்வது.. இதன் பயன் என்ன..!

அதன் பிறகு file income tax return என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்ததாக view form 26 AS என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு confirm என்ற ஆப்சனை கிளிக் செய்தால் அது TDS -cpc என்ற போர்ட்டலின் மறுபக்கம் தொடங்கும். அதிலும் attention tax payers என்ற பாப் அப் மெசேஜ் வரும். அதனை i agree என தொடங்கும் பாக்ஸினை கிளிக் செய்து proceed என்பதை கொடுக்கவும்.

 

அடுத்ததாக இது ஒரு பக்கத்தில் தொடங்கும். இதில் கிளிக் view tax credit (form 26 AS) என்பதை கிளிக் செய்யவும். அதில் Assessment year என்ன என்பதை கொடுக்கவும். அதன் பிறகு உங்களுக்கு என்ம ஆப்சனில் வேண்டுமோ அதனை கிளிக் செய்து கொள்ளலாம். இதனை view or download என்பதையும் கொடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

how to download form 26AS from new income tax portal? check details

how to download form 26AS from new income tax portal? check details/படிவம் 26AS என்றால் என்ன.. இதனை எப்படி பதிவிறக்கம் செய்வது.. இதன் பயன் என்ன..!

Story first published: Sunday, March 27, 2022, 22:58 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.