பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் 2022 தொடரின் மூன்றாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூ ப்ளஸிஸும், அனுஜ் ராவத்தும் களமிறங்கினர்.
ராவத் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் டூ ப்ளஸிஸ் அதிரடியாக ஆடினார். கோலியும் டூ ப்ளஸிஸும் அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
டூ ப்ளஸிஸ் 88 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய கோலி 29 பந்துகளில் 41 ஓட்டங்கள் குவித்தார்.
பெங்களூரு அணியின் டூ பிளசிஸ், விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 118 ஓட்டங்கள் சேர்த்தது. 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்கள் குவித்தது.
டுபிளஸிஸ் வெறியாட்டம்! பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு..
அதனைத் தொடர்ந்து, 206 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் மயங்க் அகர்வாலும் ஷிகர் தவானும் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து தவனும் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய ராஜபக்ச 22 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜ் பவாவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ஆட்டம் முழுவதுமாக பெங்களூரு அணியின் கட்டுக்குள் வந்தது. லியம் லிவிங்ஸ்டோனும் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஒடியன் ஸ்மித் ஆட்டத்தாய் வெற்றிப்பாதைக்கு திசை திருப்பி ஆடினார். பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார். 8 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுட்டன் 25 ஓட்டங்கள் எடுத்தார். மறுபுறம், ஷாருக்கானும் 24 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 208 ஓட்டங்கள் எடுத்து தொடரின் முதல்வெற்றியைப் பதிவு செய்தது. பெங்களூரு அணியின் சார்பாக சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுமாதிரி யாருமே செய்ய மாட்டாங்க! CSK முன்னாள் கேப்டன் தோனி குறித்து சேவாக் வெளிப்படை