பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு – இந்திய உணவகத்துக்கு நேர்ந்த கதி!

கர்நாடகாவில் கடந்த மாதம் ஹிஜாப் அணிந்து வந்த பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் வாசலிலேயே நிற்க வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இஸ்லாமிய மாணவிகளுக்கு அச்சுறுத்துத்தல் தரும் வகையில் காவி துண்டு அணிந்து வந்த மாணவர்களால் பதற்றமான சூழல் உருவானது. 

நிலைமையை சமாளிக்க பள்ளி கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு காலவரையற்ற விடுமுறை அளித்தது. மேலும் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு செல்ல அனுமதிக்கக்கோரி 6 மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 

மேலும் படிக்க | Hijab Row: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை – தீவிரமடையும் போராட்டங்கள்!

இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாட உயர்நீதிமன்றம் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும் என தீர்ப்பளித்தது. மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத சட்டப்படி அத்தியாவசியமான ஒன்று அல்ல எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. 

மேலும், ஹிஜாப் என்பது மதத்தின் கொண்டாட்டம் அல்ல என கூறிய நீதிமன்றம் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய வேண்டாம், காவியும் அணிய வேண்டாம் என தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் விவாதப்பொருளானது. பல்வேறு மாநிலங்களில் இந்த தீர்ப்பை ஏற்க மாட்டோம் என இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

lanterns

இந்நிலையில் கர்நாடக பாணியில் பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த இந்திய உணவகத்தை அந்நாட்டு அதிகாரிகள் மூடி சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் லாண்டர்ன்ஸ்(Lanterns) எனும் உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்துக்கு வந்த இஸ்லாமிய பெண் ஒருவரை அங்கிருந்த மேலாளர் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட பெண் பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம், சுற்றுலா மற்றும் நிறுவனங்கள் தொடர்பான 1986-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டம் 15-இன் படி உணவகத்தை மூடிவிட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Amit Shah on Hijab: நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் – அமித் ஷா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.