சென்னையில் தாங்கள் பாசமாக வளர்த்து வந்த நாயை காணவில்லை என பெண் ஒருவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ட்விட்டரில் முறையிட்டிருந்த நிலையில், மயிலாடுதுறையில் இருந்து அந்த செல்லப்பிராணி பத்திரமாக மீட்கப்பட்டது.
தீபு ஜெயின் என்ற அந்த பெண், தான் வளர்த்த Golden Retriever வெளிநாட்டு வகை நாயை, பராமரிப்பு மையத்தில் விட்டுவிட்டு ராஜஸ்தான் சென்றிருந்த நிலையில், அங்கிருந்து தப்பியோடிய நாயை Zomato ஊழியர் தூக்கிச் சென்றது சிசிடிவி மூலம் தெரியவந்தது.
பல இடங்களில் தேடியும் நாய் கிடைக்காததால், கண்டுபிடித்து தர உதவுமாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம், உரிமையாளர் பெண் ட்விட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, அமைச்சரின் உத்தரவின் பேரில் போலீசாரும், விலங்குகள் நல ஆர்வலர்களும் குழு அமைத்து நாயை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தி வெளியான நிலையில், மயிலாடுதுறையில் இருந்து நாயின் உரிமையாளர் தீபு ஜெயினை தொடர்பு கொண்ட நபர்கள் நாய் தங்களிடம் இருப்பதாக கூறி ஒப்படைத்தனர். உரிமையாளர் வீட்டுடன் இணைந்த நாய் குட்டி, சந்தோஷத்தில் துள்ளி குதித்து விளையாடியது.