பிரதமர் மோடியுடன் பயணித்தவர்கள், சந்தித்தவர்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இணையதளம் தொடக்கம்

பிரதமர் மோடியுடன் பயணித்தவர்கள், சந்தித்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

மோடி ஸ்டோரி (modistory.in) என்ற அந்தஇணையதளத்தில், முன்னாள் பாட்மிண்டன் சாம்பியன் புல்லேலா கோபிசந்த், ஒலிம்பிக்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ்சோப்ரா உள்ளிட்டோர் பிரதமர் மோடியுடனான தங்களது சந்திப்பு அனுபவங்கள் குறித்துதங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும், பிரதமர் மோடியின் ஏராளமான புகைப்படங்களும், அவரை சந்தித்தவர்களின் அனுபவங்களும் பகிரப்பட்டுள்ளன.

இந்த இணையதளம் குறித்து பாஜகவினரும் மத்திய அமைச்சர்களும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடியின் வாழ்க்கையிலிருந்து எழுச்சியூட்டும் தருணங்களைச் சேகரிப்பதற்காக ஒரு தன்னார்வ இயக்கமாக இது உருவாக்கப்பட்டிருப்பதாகவும், பிரதமராக அவர் பதவியேற்ற பின்னர், தங்களது வாழ்க்கைப் பயணத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தவர்கள், அவர்களுக்குக் கிடைத்த அனுபவத்தை வீடியோ, ஆடியோ, எழுத்து வடிவில் இந்த இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தை தொடங்கி வைத்த மகாத்மா காந்தியின் பேத்தி சுமித்ரா காந்தி குல்கர்னி, தனது ட்விட்டர் பக்கத்தில், “மோடிஸ்டோரி இணையதளத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நரேந்திர மோடியின் வாழ்க்கையிலிருந்து எழுச்சியூட்டும் தருணங்களை ஒன்றிணைக்கும் தன்னார்வ உந்துதல் முயற்சி, அவருடன் பயணித்தவர்களால் அழகாகவிவரிக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.