பிலிப்பைன்சில் எரிமலை வெடிப்பு| Dinamalar

மணிலா,-பிலிப்பைன்சில் எரிமலை வெடித்து ஏற்பட்ட புகை மண்டலத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.ஆசிய நாடான பிலிப்பைன்சின் தலைநகர் மணிலாவில் இருந்து 65 கி.மீ., துாரத்தில் தால் எரிமலை அமைந்துள்ளது. நேற்று காலை இந்த எரிமலை வெடித்ததில் அந்தப் பகுதி முழுதும் புகை மண்டலமாக மாறியது. இதையடுத்து, ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.புகையுடன் சாம்பல் துகள்களும் காற்றில் கலந்ததால், கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அங்கு வசித்தவர்கள் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.