கிரெடிட் ரேட்டிங் நிறுவனமான ஃபிட்ச் நிறுவனம் சமீபத்தில் ரஷ்யாவின் கடன் மதிப்பீட்டினை C என்ற குறைத்தது.
இது உக்ரைன் – ரஷ்யா மீதான பதற்றத்தின் மத்தியில், ரஷ்யாவின் ரூபிள் மதிப்பானது வலுவிழந்து காணப்படுகின்றது.
தொடர்ந்து ரஷ்யாவின் மீது பல்வேறு நாடுகளும் தடைகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளது.
இந்திய பணக்காரர்கள் அதிகம் முதலீடு செய்யும் இடம் இதுதான்..!
அடுத்தடுத்த தடைகள்
தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் முக்கிய வணிகமாக இருந்து வரும் எண்ணெய் மற்றும் கேஸ் வணிகத்திலேயே அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கைவைத்துள்ளன. அது மட்டும் அல்ல ரஷ்யாவின் மத்திய வங்கியானது தங்கத்தினையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது̣. ஏற்கனவே பொருளாதார தடையால் செய்வதறியாது தவிக்கும் ரஷ்யா, தற்போது கையிருப்பில் இருக்கும் தேவையான தங்கத்தினை விற்பனை செய்யலாம். அதன் மூலம் தற்போதைய நெருக்கடியினை சமாளிக்க முடியும் என்று கூறப்பட்டது.
வளர்ச்சியில் சறுக்கல்
ஆனால் உலக நாடுகள் பலவும் அடுத்தடுத்து ரஷ்யாவுக்கான அனைத்து வழிகளையும் மூட ஆரம்பித்துள்ள நிலையில், ரஷ்யாவின் வளர்ச்சி விகிதமானது தற்போது சுருங்கத் தொடங்கியுள்ளது. இது எல்லாவற்றிற்கும் மத்தியில் ரஷ்யாவின் ரூபிள் மதிப்பானது பெரும் வீழ்ச்சியினைக் கண்டுள்ளது.
இருமடங்கு முதலீடு
கடந்த 2014ல் கிரீமியா மீதான படையெடுப்புக்கு பிறகு பெரும் பிரச்சனை இல்லாவிட்டாலும், ரஷ்யா சில பிரச்சனைகளை எதிர்கொண்டது. இதன் விளைவாக அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக அன்னிய முதலீடுகளை வலுப்படுத்தியது. ரஷ்யாவின் மத்திய வங்கி தரவின் படி 2014ல் இருந்ததை விட தற்போது கிட்டதட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது. இது தோராயமாக 630 பில்லியன் டாலராகும்.
அணுக முடியாத நிலையில் ரஷ்யா
ரஷ்யாவின் பெரும்பாலான முதலீடுகள் அமெரிக்க டாலரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஷ்யாவின் பெரும்பாலான கையிருப்புகளின் . சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உண்டு, தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள் இருப்பு நிதிகளை முடக்கியுள்ளன. இதனால் கையிருப்பில் தேவையான நிதியானது இருந்தும், தற்போது ரஷ்யா அதனை அணுகமுடியாத நிலையில் உள்ளது.
பெரும் அடி
ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்காக பொருளாதார தடையில் அனுமதி கொடுத்தாலும், இது ரஷ்யாவின் ரூபிள் வளர்ச்சியினை மீட்க போதுமானதாக இல்லை. மாறாக பெரும்பகுதி நிதி அண்டை நாடுகளிடம் சிக்கியுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா தற்போது கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் தவிக்கிறது. மொத்தத்தில் பணத்தினை மக்கள் எடுப்பதற்கும் கூட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இது தனியார் சேமிப்பினையும் கரைக்க வழிவகுக்குகிறது. மொத்தத்தில் ரஷ்யாவின் ரூபிளுக்கு பெரும் அடியாக வந்துள்ளது.
ஸ்விப்ட் தடை
அதுமட்டும் அல்ல ரஷ்யா ஸ்விப்ட் நெட்வொர்க் பரிமாற்றத்தில் இருந்தும் விலக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ரஷ்யாவின் பொருளாதாரத்தில் மேலும் பலவீனமாக்கியுள்ளது. சர்வதேச அளாவில் 2 வது பெரிய பயனராக இருந்து வந்த ரஷ்யா, ஸ்விப்ட் பிரச்சனையால் கடனும் பெரியளவில் பெற முடியாது, வேறு எந்த நாட்டில் இருந்தும் பணம் பெறவும் முடியாது. கொடுக்கவும் முடியாது.
எண்ணெய் வணிகம்
எல்லாற்றிற்கும் மேலாக சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக இருக்கும் ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் சப்ளை செய்து வருகின்றது. தற்போதைக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியில் பிரச்சனை பெரிதாக இல்லை என்றாலும், ரஷ்யாவுக்கு மாற்றினை செய்துவிட்டு, அதன்பிறகு ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்கப்போவதாக EU நாடுகள் தெரிவித்துள்ளன. எனினும் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவில் இருந்து தடை செய்துள்ளன.
வணிக முறிவுகள்?
ரஷ்யாவுக்கு எதிர்ப்பினை காட்டும் விதமாக பல்வேறு நாட்டின் நிறுவனங்களும், ரஷ்யாவில் தங்களது விற்பனையை குறைத்துள்ளன. சில நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது வணிக உறவுகளை முறித்துக் கொண்டுள்ளன. இப்படி ஏராளமான பிரச்சனைகளுக்கு மத்தியில் சிக்கித் தவித்து வரும் ரஷ்யாவின் இப்பிரச்சனைக்கு, புடினின் மோசமான லட்சியங்கள் தான் காரணம் என நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
Russia – Ukraine crisis! Putin’s ill-intentions are to blame for Russia’s economic collapse
Russia – Ukraine crisis! Putin’s ill-intentions are to blame for Russia’s economic collapse/புடினின் மோசமான லட்சியம்.. ரஷ்யாவின் பொருளாதார அழிவுக்கு காரணம்.. விளாசும் நிபுணர்கள்..!