புட்பாண்டா நினைவிருக்கா..? இன்று அதன் நிலைமை என்ன தெரியுமா..?

இந்தியாவில் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்த காலம், குறிப்பாக இத்தகைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சீனா மற்றும் ஜப்பான் முதலீட்டாளர்கள் தேடிதேடி அதிகப்படியான முதலீடு செய்த காரணத்தால் மிகப்பெரிய அளவிலான கவனத்தை ஈர்த்தது.

இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் முதலில் பெரும் வெற்றி மற்றும் வர்த்தகத்தை அடைந்தது ஆன்லான் டாக்ஸி மற்றும் ஆன்லைன் டாக்ஸி புக்கிங் சேவைகள் தான். அதிலும் குறிப்பாக ஆன்லைன் உணவு டெலிவரி சேவையில் போட்டி அதிகமாக இருந்த வேளையில் வேகமாகவும் வளர்ச்சி அடைந்த வந்தது.

அப்படித் திடீரென இந்தியா முழுவதும் வைரலான ஒரு நிறுவனம் தான் புட்பாண்டா.. ஆனா இன்று அதன் நிலைமை என்ன தெரியுமா..?!

இனி எல்லோருக்கும் வார சம்பளம் தான்.. என்ஜாய் பண்ணுங்க.. இந்தியாமார்ட் முடிவு..!

புட்பாண்டா

புட்பாண்டா

2012 ஆம் ஆண்டுச் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் புட்பாண்டா (Foodpanda), ஆரம்பம் முதல் வேகமாக உலக நாடுகளுக்கு விரிவாக்கம் செய்து வந்த புட்பாண்டா இந்தியாவிலும் விரிவாக்கம் தனது ஆன்லைன் புட் டெலிவரி சேவையைத் துவங்கியது.

வீழ்ச்சி

வீழ்ச்சி

புட்பாண்டா நிறுவனம் அறிமுகம் செய்தும் போது வலுவான தொழில்நுட்ப அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட உணவக நெட்வொர்க் வைத்துள்ளதாகக் கூறிக்கொண்டு தனது சேவையை அறிமுகம் செய்தது. ஆனால் கடைசியில் இதே டெக் சேவை தான் பெரிய ஆபத்தாக மாறி அதன் அழிவுக்குக் காரணமாக அமைந்தது.

10-15 மில்லியன் டாலர்
 

10-15 மில்லியன் டாலர்

புட்பாண்டா நிறுவனத்தில் ஆரம்பத்தில் முதலீடு செய்தவர்கள் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினால் போதுமென வெறும் 10-15 மில்லியன் டாலர் தொகையைப் பெற தயாரானார்கள், ஆனாலும் இந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.

தோல்வி

தோல்வி

புட்பாண்டா நிறுவனத்தைத் தனது வாடிக்கையாளர்களே இந்த நிலைக்குத் தள்ளியதற்கு முக்கியக் காரணம், அதேபோல் டெக் சேவையில் முன்னோடி எனப் பெருமை பேசிய புட்பாண்டா வாடிக்கையாளர்கள் செயல்களைச் சரிவரக் கவனிக்கவில்லை இது அனைத்தும் புட்பாண்டா-வின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

40 சதவீத டிஸ்கவுன்ட் கூப்பன்

40 சதவீத டிஸ்கவுன்ட் கூப்பன்

உதாரணமாக மூடப்பட்ட உணவகத்தில் உணவை ஆர்டர் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்குக் கட்டாயம் உணவு கிடைக்காது. இதைத் தெரிந்துகொண்டு புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, சேவையில் தான் தவறு என ஏற்றுக்கொண்டு 40 சதவீத டிஸ்கவுன்ட் கூப்பன் அளிக்கப்படும். இதை அடுத்த ஆர்டரில் பயன்படுத்துவதன் மூலம் புட்பாண்டா அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டது.

பல தவறுகள்

பல தவறுகள்

இதேபோல் உணவு ஆர்டரை உணவகங்களுக்குத் தெரிவிப்பதில் பெரிய அளவிலான தாமதம் இருந்தது. இப்படிப் பல தவறுகளை மிகவும் காலதாமதமாகவே புட்பாண்டா தெரிந்துகொண்டது, இதற்கிடையில் பணம், வாடிக்கையாளர்கள், உணவகங்கள் பெரிய அளவில் இழப்பைச் சந்தித்தது.

1-9 ரூபாய்

1-9 ரூபாய்

இதேபோல் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கப் புட்பாண்டா ஒரு இலக்க விலையில் உணவுகளைத் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கத் துவங்கியது. இதில் பெரிய அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு தனது மோசமான ஆப்ரேஷன்ஸ் மற்றும் டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியது.

ஓலா கைப்பற்றியது

ஓலா கைப்பற்றியது

இந்நிலையில் உபர் நிறுவனத்தின் உபர்ஈட்ஸ் சேவைக்குப் போட்டியாக இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா 2018ஆம் ஆண்டில் புட்பாண்டா-வை கைப்பற்றியது. புட்பாண்டா-வை ஓலா கைப்பற்றிய பின்பு ஒரு நாளுக்கு 2 லட்சம் ஆர்டர் வரையில் வர்த்தகம் கிடைத்தது.

2019ல் மூடப்பட்டது

2019ல் மூடப்பட்டது

ஆனால் சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செய்த நிலையில் 2019ல் புட்பாண்டா வெறும் 5000 – 6000 ஆர்டர்களை மட்டுமே பெற்றது. 2020ல் வெறும் 82 கோடி ரூபாய் வருவாய் உடன் இருந்த புட்பாண்டா 700 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டது. இந்நிலையில் 2019 ஆண்டு மத்தியில் மூடப்பட்டது.

45 நாடுகள்

45 நாடுகள்

புட்பாண்டா இந்தியா, ரஷ்யா, கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்கு ஆசிய பகுதிகள் என மொத்தம் 45 நாடுகளில் இயங்கி வந்தது. ஆனால் இன்று இருக்கும் இடமே தெரியாமல் வெறும் 12 நாடுகளில் சிறிய அளவிலான வர்த்தகத்தை மட்டுமே செய்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மொத்தமாக மாறியுள்ளது.

300 ஊழியர்கள் பணிநீக்கம்

300 ஊழியர்கள் பணிநீக்கம்

இதேபோல் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் 2015ஆண்டு அதிகச் சம்பளம் வாங்கும் 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட்அப் ஊழியர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

புட்பாண்டா-வின் சரிவு அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஒரு பாடம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Do you remember foodpanda? How a famous startup fails miserably in India

Do you remember foodpanda? How startup fails miserably in India புட்பாண்டா நினைவிருக்கா..? இன்று அதன் நிலைமை என்ன தெரியுமா..?

Story first published: Sunday, March 27, 2022, 10:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.