டில்லி
வரும் 31 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயரவை கண்டித்து காங்கிரஸ் கட்சி 3 கட்ட போராட்டம் நடத்த உள்ளது.
காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா நேற்று செய்தியாளர்களிடம், “உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடந்ததால் வாக்குகளைப் பெற 137 நாட்களுக்கு பெட்ரோல், டீசல், காஸ் விலைகளை ஒன்றிய அரசு உயர்த்தாமல் வைத்திருந்தது. கடந்த ஒரு வாரத்தில் இவற்றின் விலைகள் தினசரி உயர்த்தப்பட்டிருக்கிறது. எரிவாயு விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு தனது கஜானாவை நிரப்புவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.. காங்கிரஸ் கட்சி எரிபொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து வரும் 31ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை 3 கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளது.
இதில். முதல் கட்டமாக வரும் 31ம் தேதி காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியேயும், பொது இடங்களிலும் போராட்டம் நடத்துவார்கள். எரிவாயு சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்தும், டிரம்ஸ், மணி உள்ளிட்ட இசை கருவிகளை அடித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்.
பிறகு ஏப்ரல் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மாவட்ட தலைநகரங்களிலும், 7ம் தேதி அனைத்து மாநில தலைநகரங்களிலும் தர்ணா, பேரணி நடத்தப்படும். ” என கூரி உள்ளார்.