நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் ரூ.1898.73 கோடிஅபராதம் வசூல் செய்யப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்ப தாவது:
நாடு முழுவதும் கடந்த 2021-ம் ஆண்டில் 2,15,328 போக்குவரத்து விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. இதன்காரணமாக சுமார் 1.98 கோடி பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.1,898.73 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மிக அதிகபட்சமாக டெல்லியில்71.89 லட்சம் பேருக்கும், தமிழகத்தில் 36.26 லட்சம் பேருக்கும் கேரளாவில் 17.41 லட்சம் பேருக்கும் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. போக்குவரத்து விதி களை கண்டிப்புடன் பின்பற்ற வாகனஓட்டிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 553 தேசியநெடுஞ்சாலை திட்டங்களில் கடந்த ஆண்டில் 10,964 கி.மீ.தொலைவுக்கு சாலை திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளன.
இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.