திருக்கனுார் : திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார், பொதுமக்கள் பங்கேற்ற நல்லுறவு கூட்டம் நேற்று நடந்தது.இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் வேலு, குமார் முன்னிலை வகித்தனர். திருக்கனுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பேசுகையில், ‘கிராமப் புறங்களில் உள்ள கோவில்களில் தற்போது திருவிழாக்கள் துவங்க உள்ளது. ஊர் பெரியவர்கள் எந்த அசம்பவிதமும் இன்றி விழாக்களை நடத்தி முடிக்க போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
குற்றச்சம்பங்களை தடுக்க கிராமங்கள் தோறும் பொது இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும்.மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கம், கிராமப் புறங்களில் அதிகரித்து வருகிறது. இதனால், கிராமத்திற்குள் புதிய நபர்கள் சுற்றித்திரிந்தால், கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவது தெரிய வந்ததால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தனர்.
திருக்கனுார் : திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார், பொதுமக்கள் பங்கேற்ற நல்லுறவு கூட்டம் நேற்று நடந்தது.இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் வேலு, குமார்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.