கானாத்தூர் காவல் நிலையத்தில் திடீரென காவல்துறை தலைமை இயக்குனரும், டிஜிபியுமான சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.
தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும் கானாத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவில் பணி குறித்து கேட்டறிந்தார். புகார் கொடுக்கவரும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை டிஜிபி வழங்கினார். மனு கொடுக்கவரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்களின் குறைகளை உடனுக்குடன் களைய காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். சிறப்பாக செயல்பட்டு குற்ற நடவடிக்கைகள் நடக்காமல் தடுத்த காவலர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். காவலர்களுக்கு முறையாக வாராந்திர ஓய்வு வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். பின்பு கானாத்தூர் காவல் நிலைய காவலர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM