மயிலாடுதுறை: மூன்று மதங்களின்படி நடந்த திருமணம்

மூன்று மதத்தின்மீதும் கொண்ட பற்றால் இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் இந்து என மூன்று முறைகளின்படியும் திருமணம் செய்துள்ளார் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒருவர்.
மயிலாடுதுறையில் ரஸ்தா மணவெளி தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமர்(30). இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்து சமயத்தைச் சேர்ந்த இவருக்கு பெற்றோர் தங்களது சமூகத்தை சேர்ந்த திருவையாறை சேர்ந்த புவனேஸ்வரி(26) என்ற பட்டதாரி பெண்ணை பேசிமுடித்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.
image
புருஷோத்தமன் அனைத்து சமூகத்தினருடன் சேர்ந்து குழந்தை பருவத்தில் இருந்து வளர்ந்து வந்ததாலும், குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுடன் அதிக அளவில் பழகிவந்ததாலும் அனைத்திலும் ஈர்ப்புகொண்ட புருஷோத்தமன் தனது திருமணத்தை வித்தியாசமாகவும், மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விததத்திலும் நடத்த வேண்டுமென்று நண்பர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்ததோடு மணப்பெண் வீட்டாரிடமும் தெரிவித்துள்ளார்.
image
அவர்களும் ஒப்புக்கொண்டதை அடுத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ முறைப்படி முதல்நாளும், மறுநாள் இந்து முறைப்படியும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்து பத்திரிகைகள் அடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்படி நேற்று மாலை புருஷோத்தமன்-புவனேஸ்வரி திருமணத்தை இஸ்லாமிய முறைப்படி, பள்ளிவாசல் இமாம் வைபத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து, கிறிஸ்தவ முறைப்படி பாஸ்டர் திருமணத்தை நடத்தி வைத்தார்.
image
image
இன்று 27ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.  மும்மத முறைப்படி  திருமணம் செய்த புருஷோத்தமன் கூறுகையில், மதநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த திருமணத்தை நடத்தியதாக கூறினார். இந்து சமுதாயத்தை சேர்ந்தவர் இஸ்லாமிய, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்தது ஆச்சரியதை ஏற்படுத்தியது என்று உறவினர்கள், நண்பர்கள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.