பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை இளைஞர் ஒருவர் தாக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் பீகார் மாநில முதமைச்சர் நிதிஷ் குமார் தனது சொந்த ஊரான பக்தியார்பூர் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும்போது இந்த விபரீத சம்பவம் நடந்தது.
முதல்வர் நிதிஷ் குமார் தனது மக்களவைத் தொகுதியான பார்ஹ் பகுதியில் அவ்வபோது பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தனது சொந்த ஊரான பக்தியார்பூர் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் ஷில்பத்ரா யாஜிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தச் சென்றார்.
Bihar | A youth tried to attack CM Nitish Kumar during a program in Bakhtiarpur. The accused was later detained by the Police.
(Viral video) pic.twitter.com/FoTMR3Xq8o
— ANI (@ANI) March 27, 2022
பாதுகாப்பு அதிகாரிகள் பலர் அருகில் இருந்த நிலையில், நிதிஷ் குமார், ஷில்பத்ரா யாஜியின் சிலைக்கு மரியாதை செய்ய மேடைக்குச் சென்றார். மேடையில் குனிந்து மலர்களை எடுக்கும்போது, திடீரென மேடைக்கு ஓட்டிவந்த இளைஞர் முதல்வரை பின்புறமாகத் தாக்கினார்.
உடனடியாக மேடைக்கு வந்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த இளைஞரை மடக்கி இழுத்துச்சென்று அடிக்க முயன்றனர்.
அப்போது தடுத்த முதல்வர் நிதிஷ் குமார், இளைஞரை அடிக்காதீர்கள். அவர் அடித்ததற்கான காரணத்தை அவர் சொல்லட்டும் என்று கூறினார்.
பின்னர் காவல் துறையினர் இளைஞரை அழைத்துச் சென்றனர். முதல்வரைத் தாக்கிய இளைஞரின் பெயர் சங்கர் ஷா (Shankar Sah) என்பது மட்டும் தெரியவந்துள்ளது.
முதல்வர் நிதிஷ் குமார் பார்ஹ் தொகுதியில் 5 முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.