ரஷ்யாவுடன் இணைவது தொடர்பான வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என கிழக்கு எல்லை பகுதி மற்றும் லுஹான்ஸ்க் பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய ஆதரவாளர்களை அந்த நாட்டு அரசாங்கம் ஒடுக்கி வருவதாகவும், மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைவது ரஷ்யாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் செயல் எனவும் ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி 20 திகதி ரஷ்ய ஆதரவாளர்களை அதிகமாக கொண்ட உக்ரைனின் கிழக்கு எல்லையில் டான்பாஸ் பகுதியில் உள்ள லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளை சுதந்திர பகுதிகளாக ரஷ்யா அறிவித்தது.
BREAKING: Separatist leader in Luhansk, eastern Ukraine, says a referendum may soon be held regarding his region joining Russia.
— The Spectator Index (@spectatorindex) March 27, 2022
மேலும் அந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ரஷ்யா தனது ராணுவ படையையும் அப்பகுதிக்குள் அனுப்பி வைத்ததுடன், உக்ரைன் மீதான முழுநீள போரையும் ரஷ்யா அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.
தற்போது உக்ரைனில் ரஷ்ய ராணுவம் பெரும்பாலான பகுதியை தீவிர தாக்குதலின் மூலம் கைப்பற்றியுள்ள நிலையில், 32வது நாளாக இன்றும் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், சுகந்திர பகுதிகளாக அறிவிக்கப்பட்ட லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பான வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என லுஹான்ஸ்க் பகுதியின் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத தலைவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மக்களை வரவேற்கும் அமெரிக்கா: ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு!