யதாத்ரி: தெலுங்கானாவில் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் , 1,000 ஆண்டுகள் பழமையான லட்சுமி குடைவரை கோவில் மறு புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. நாளை கோயில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வரின் கனவு திட்டம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை கோவில், உலக பிரசித்தி பெற்றது. தெலுங்கானாவிலும், அதேபோன்ற ஒரு கோவிலை கட்டமைக்கவேண்டும் என்பது, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் கனவு திட்டம். இதற்காக தெலுங்கானாவின் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில், உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மரின் குடைவரை கோவில் உள்ளது. வைணவத்திருக்கோயிலான இக்கோயிலின் மறு புனரமைப்பு பணிகள் 2016-ல் துவங்கப்பட்டது.
கோயில் மறுபுனரமைப்பு பணிகளுக்காக முதல்வர் சந்திரசேகரராவ் ரூ. 1,800 கோடி நிதி ஒதுக்கினார். இதையடுத்து இரவு பகல் பாராமல், நுாற்றுக்கணக்கான சிற்பிகளும், கலைஞர்களும் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மறு புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், நாளை (மார்ச்.28) நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில், கோயில் திறக்கப்பட உள்ளதாகவும், இதில் முதல்வர் சந்திசேகரராவ் உள்ளிட்ட அமைச்சர்கள், வி.ஐ.பி.க்.கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.
Advertisement