#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போர்- கூடுதல் ஆயுதங்கள் வேண்டும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 32-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
மார்ச் 27, 6.33 PM

உக்ரைனை ரஷியா இரண்டு துண்டாக பிரிக்கலாம் – உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை

மார்ச் 27, 12.30 PM
உக்ரைனில் உள்ள எண்ணெய் மற்றும் மற்றும் உணவு விநியோக அமைப்புகளை ரஷியா அழிக்கத்தொடங்கியிருப்பதாக உக்ரைன் உள்துறை மந்திரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் உக்ரைன் எல்லையில்  ரஷியா கூடுதல் படைகளை ரோந்து பணியில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். 
மார்ச் 27, 11.00 AM

கூடுதல் ஆயுதங்கள் வேண்டும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை
உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 32-வது நாளை எட்டியுள்ளது. இருநாட்டு படைகளும் கடுமையாக மோதி வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு ரஷியா பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், எந்த ஒரு பிராந்தியத்தையும் விட்டு கொடுக்க ஒப்புக்கொள்ள முடியாது எனவும் ஜெலன்ஸ்கி உறுதிபட தெரிவித்துள்ளார். 
இதனிடையே, போர் விமானங்கள், டாங்கிகள் போன்ற கூடுதல் உபகரணங்கள் இன்றி மரியுபோல் நகரை காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, நேட்டோ நாடுகள் வசம் உள்ள ஆயுதங்களில் வெறும் 1 சதவீத ஆயுதங்கள்  மட்டுமே தேவைப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 
மார்ச் 27, 9.15 AM
ரஷியாவிடம் இருந்து மேலும் இரு இடங்களை மீட்டதாக உக்ரைன் அறிவிப்பு
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 32-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷியாவுக்கு உக்ரைன் படைகளும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையேயான போர் நீண்ட நாட்கள் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. 
ரஷிய படைகள் வசம் இருந்த சில இடங்களையும் உக்ரைன் படைகள் மீட்டுள்ளன. அந்த வகையில்,  ஜபோரிஜியா மாகாணத்தில்  ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த  பொல்டாவ்கா, மாலினிவ்கா ஆகிய இரு கிராமங்களையும் உக்ரேனிய படைகள் மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த இரு இடங்களிலும் கடுமையான சண்டை நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் 27, 7.20 AM
உக்ரைனின் லிவிவ் நகரத்தில் ரஷிய படைகள் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தின. இரண்டு ராக்கெட்டுகள் மூலம் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் லிவிவ் நகரம் குலுங்கியது. இந்த நிலையில், ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில், நடமாடிய நபரை உக்ரைன் போலீசார் கைது செய்துள்ளதாக லிவிவ் நகர கவர்னர் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “  ராக்கெட் பறந்து வந்ததையும் தாக்குதல் நடத்திய இடத்தையும் சந்தேக நபர் செல்போனில் படம் பிடித்துள்ளார். அவரது செல்போனில் லிவிவ் பிராந்தியத்தில் உள்ள சோதனைச்சாவடிகளின் புகைப்படமும் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். 
இந்த புகைப்படங்களை ரஷிய தொலைபேசி எண்களுக்கு அந்த நபர் அனுப்பியுள்ளார்” என்றார். முன்னதாக லிவிவ் நகரத்தில் உள்ள எண்ணெய் சேகரிப்பு மையம் மற்றும் தொழில்துறை கட்டமைப்பு மீதும் ராக்கெட் தாக்குதலை ரஷியா நடத்தியது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட பல மணி நேரங்களுக்கு அப்பகுதியில் கரும்புகையாக காட்சி அளித்தது. 
மார்ச் 27, 3.32 AM
மார்ச் 27, 2.44 AM

மார்ச் 27, 1.50 AM
மார்ச் 27, 00.19 AM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.